இ.சுதாகரன்


 தரம் ஒன்று மாணவர்களை பாடசாலைகளில் இணைக்கும் நிகழ்வு பட்டிருப்பு வலயத்திற்குட்பட்ட கோட்டைக்கல்லாறு திருவள்ளுவர் வித்தியாலயத்தில் பாடசாலையின் முதல்வர் திருமதி சிறிப்பிரியா வேழவேந்தன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் வியாழக்கிழமை(29) நடைபெற்றது.

நிகழ்வில் பாடசாலையின் முன்னாள் அதிபரும் ஸ்தாபகருமான கே.நாதலிங்கம் மற்றும் அவருடைய துணைவியார்இபாடசாலையின் பிரதி முதல்வர் பூ அரசரெத்தினம்இபகுதித் தலைவர்கள் பாடசாலை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஆர்.ஜெயரெத்தினம் மற்றும் பாடசாலை அபிவிருத்திங் சங்கச் செயலாளர் பு.சுவர்ணராஜ்பழைய மாணவர் சங்கச் செயலாளர் பா.ரமேஸ்ஆசிரியர்கள்மாணவர்கள்பெற்றோர் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் தரம் 2 மாணவர்கள் பாடசாலையில் புதிதாக இணைந்து கொண்ட மாணவர்களுக்கு பூமாலை அணிவித்து இனிப்புப் பண்டங்களை வழங்கி வரவேற்றதுடன்  மாணவர்களின் கலை நிகழ்வுகள் மற்றும் நிகழ்வில் பாடசாலையின் ஸ்தாபகர் பொன்னாடை அணிவித்து வாழ்த்துபா வழங்கிக் கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours