- யூ.கே. காலித்தீன் - 

கல்முனை சாஹிரா தேசிய கல்லூரியில் 1985ஆம் ஆண்டிலிருந்து நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்து விடுதியில் தங்கி கல்வி கற்ற பழைய மாணவர்களின் மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வு, பாசிக்குடா நாசிவன் தீவின் கேவ் ரிசோட் விடுதியின் சிரேஷ்ட மாணவர்களில் ஒருவரான எம்.எம்.நவாஸ் ஆசிரியர் தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

பல வருட இடைவெளிக்குப் பின்னர் பல்வேறு உயர் பதவிகளிலும், வெவ்வேறு துறைகளிலும் பணியாற்றும் பழைய மாணவர்கள் தமது குடும்ப சகிதம் கலந்துகொண்ட இந்த நிகழ்வு, வெறும் கொண்டாட்டமாக மட்டுமன்றி வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு நினைவாக அனைவர் மனங்களிலும் பதிந்தது.

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று கூடலை நனவாக்குவதற்காக, லண்டனில் வசிக்கும் 1993ஆம் ஆண்டு சாதாரண தர பழைய விடுதி மாணவரான அக்கரைப்பற்று ஏ.எல்.எம். சமீம் கடந்த பல வருடங்களாக மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகள் பிரதான அடித்தளமாக அமைந்தன.
அவருக்குத் துணையாக காத்தான்குடி என்.எல்.எம் இம்றான், ஜே.எம்.பைருஸ், வரப்பத்தான்சேனை ஏ.எல்.எம்.அஸ்ரப், ஓட்டமாவடி எம்.எம்.நவாஸ், அஹமட் இர்ஷாட், ஏ.எல்.எம். நெளபர்  (ஓட்டமாவடி) சாய்ந்தமருது யூ.கே. காலித்தீன், வாழைச்சேனை ஜே. மிப்தாவுடீன், அட்டாளச்சேனை எம்.எஸ்.எம். இக்றாம், எம்.ஏ.சௌமி ஆகியோரின் நிர்வாக ஒத்துழைப்புகளும், பழைய மாணவர்களின் மனமுவந்த நிதிப் பங்களிப்புகளும் இந்த நிகழ்வை மிகச் சிறப்பாக நடாத்த உறுதுணையாக இருந்தனர்.

இந்நிகழ்வானது இரண்டு கட்டங்களாக பிரிக்கப்பட்டு முதற்கட்டமாக அதில் எல்லோரது சுய அறிமுகத்தோடு அவர்களது சுய விபரங்களையும் கடந்தகால அனுபவங்களையும் அறியக் கூடியதாக இருந்தது .

ஒன்று கூடிய மாணவர்களாலும் அவர்களது பிள்ளைகளினாலும் ஆடல், பாடல், வலுன் உடைத்தல், சங்கீத கதிரை மற்றும் போத்தலுக்குள் நீர் நிரப்புதல் போன்ற சுவாரசியமான கலை நிகழ்வுகளும் நடந்தேறினே.

இதன் போது விடுதி மாணவர்களை அக்காலப்பகுதியில நெறிப்படுத்தி பக்குவப் படுத்தி புடம் போட்ட விடுதி ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர். அந்த வகையில் தேசிய மக்கள் சக்தியின்
அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் அபிவிருத்தி குழு தலைவரும், இலங்கை அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினருமான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா, சட்டம் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளரும், முன்னாள் சாய்ந்தமருது பிரதேச செயலாளருமான, ஏ.எல்.எம். சலிம், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் ஏ.ஆர்.எம். அன்ஸார் மற்றும் ஓய்வு நிலை வரலாற்று ஆசிரியர் என்.எம்.எம். அன்வர் ஆகியோர் கலந்து சிறப்பித்த இந்த உன்னதமான நிலையில் அவர்களது கடந்த கால உணர்வுகளையும் பகிர்ந்து கொண்டனர். 

நிகழ்வில் கலந்து கொண்ட விடுதி மாணவர்களுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கி வைத்ததோடு விடுதி ஆசிரியர்களுக்கும் பொன்னாடையும் நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டு முதலாம் கட்ட அமர்வு நிறைவு பெற்றது

இரண்டாம் கட்ட நிகழ்வாக
2026/2017 ம் ஆண்டுக்கான  புதிய நிர்வாகம் தெரிவும் நடைபெற்றது.தலைவர் எம்.எம்.நவாஸ்,  (ஓட்டமாவடி) செயலாளர் ஏ.எல்.எம். நெளபர்  (ஓட்டமாவடி) பொருளாலர் - என்.எல்.எம். இம்ரான்  (காத்தான்குடி) பிரதித் தலைவர்- யூ.கே. காலித்தீன், (சாய்ந்தமருது) பிரதிச் செயலாளர் - எம்.எஸ்.எம். இக்றாம்,  (அட்டாளைச் சேனை) பிரதிப் பொருளாலர் - ஜே.எம்.பைரூஸ், (காத்தான்குடி) நிருவாக உறுப்பினர்களாக ஏ.எச்.எம்.சிறாஜ், (மூதூர்) எஸ்.எம்.வி.அஜ்மல் கான்  (ஒலுவில்) எம்.ஐ.எம். பஹ்மினாஸ், (நீர்கொழும்பு)
ஏ.எல்.எம்.அஸ்ரப், (வரப்பத்தான் சேனை) ஏ.எல்.கியாஸ்தீன்,  (பொத்துவில்) ஏ.ஜே.எம். ஜனூஸ், (சம்மாந்துறை)  பிரதான போசகர்களாக  ஐ.எல். அப்துல் ஹை, (அட்டாளைச்சேனை)
எஸ்.ஏ.எம்.றியாஸ், (ஓட்டமாவடி) எம்.விஜித அன்வர், (ஓட்டமாவடி) ஆகியோருடன் ஆலோசகர்களாக ஏ.எல்.எம்.சமீம் (லன்டன்) நளீம், (அமெரிக்கா) நஜிமுன் நியாஸ், (அவுஸ்திரேலியா) எம் அப்கார், (கல்லெலியே) ஆகியோர் சபையோரினால் தெரிவு செய்யப்பட் டனர்.   .




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours