( வி.ரி.சகாதேவராஜா)

புலம் பெயர் தமிழர்கள் கணிசமானளவு வாழ்கின்ற அவுஸ்திரேலியாவில் புத்தாண்டு தின நிகழ்வுகள் ஆலய தரிசனத்துடன் ஆரம்பமாகியது.

நள்ளிரவில் வாண வேடிக்கைகள் நகரை ஆக்கிரமித்தன.

நள்ளிரவில் மட்டுமல்ல காலையிலும் சிட்னி முருகன் ஆலயத்தில் சனக்கூட்டம் அலைமோதியது.

சிட்னியில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மின்றோ சிவன் ஆலயம், வெங்கடேஸ்வரா ஆலயம் மத்தியில் உள்ள மாதா ஆலயம் எல்லாம் மக்களால் நிரம்பி வழிந்தது.

அங்குள்ள 20 அடி உயர சிவன் சிலை பலரையும் ஈர்த்தது.

குறிப்பாக இலங்கை தமிழர்கள் கூடுதலாக ஆலயங்களில் காலைப்பொழுதை கழித்தனர்.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours