( ஆ.நிதாகரன்)
போரதீவுப்பற்று பிரதேசசபை திருப்பழுகாமம்-01 பாலர் பாடசாலையில் புதிய மாணவர்களை வரவேற்றலும் முதலாம் தரத்திற்கு இவ்வருடம்(2026) செல்லும் மாணவர்களை கௌரவித்தல் நிகழ்வானது இன்று(28) பாலர் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வானது பாலர் பாடசாலையின் ஆசிரியர்களின் தலைமையில் இடம்பெற்றதோடு புதிய மாணர்கள் மலர்மாலைகள் அணிவித்து வரவேற்கப்பட்டனர்.மேலும் மாணவர்களின் கலைநிகழ்வுகளும்,முதலாம் தரத்திற்கு செல்லும் மாணவர்களுக்கான பரிசுப்பொருட்கள் மற்றும் நினைவுச் சின்னங்களும் வழங்கிவைக்கப்பட்டன.இப்பரிசுப் பொருட்களை "உயிர்ப்பு "என்னும் அமைப்பினர் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி நிகழ்விற்கு போரதீவுப்பற்று பிரதேசசபை முன்பள்ளி உத்தியோகத்தர்,பிரதேசபை உறுப்பினர்கள்,கிராமமுன்னேற்ற சங்க பிரதிநிதிகள்,ஆலய பிரமுகர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.















Post A Comment:
0 comments so far,add yours