எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி அனுசரணையில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான வாழ்வாதார உதவிக்கான உபகரணங்கள் மற்றும்  சமுதாய அடிப்படை அமைப்புகளால் முன்மொழியப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள், பிரதேச சமுதாய அடிப்படை அமைப்பினால் முதியோருக்கான சுகாதார அபிவிருத்தி வசதிகளுக்கான உபகரணங்களை கையளித்தல் மற்றும் கனரக வாகனங்களை இயக்கும் பயிற்சியில் கலந்து கொண்ட இளைஞர்களுக்கான தேசிய தொழில் தகைமை (NVQ 4) சான்றிதழ்
வழங்கும் நிகழ்வு நேற்று ( 13) பிரதேச செயலக மாநாட்டு மண்பத்தில்  இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் உ. உதயஸ்ரீதரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் உதவி பிரதேச செயலாளர் சத்யகௌரி தரணிதரன்  தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,
 இதன் போது ஆசிய அபிவிருத்தி வங்கியினால் மாங்காடு, களுவாஞ்சிகுடி தெற்கு, எருவில் கிழக்கு, மகிழூர் கிழக்கு, ஓந்தாச்சிமடம் வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலுள்ள பயனாளிகளுக்கு சுயதொழிலுக்கான  உபகரணங்கள் கையளிக்கப்பட்டன.

 இந்நிகழ்வில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.பிரபாகரன்,  தலைமையக முகாமையாளர் புவனேஸ்வரி ஜீவகுமார், முகாமைத்துவ பணிப்பாளர் கே.உதயகுமார், கருத்திட்ட முகாமையாளர் விமலராணி யோகேந்திரன், மாங்காடு, எருவில், மற்றும் கல்லாறு சமுர்த்தி  வங்கிகளின் முகாமையாளர்கள், மாவட்ட சமூக அபிவிருத்தி உதவியாளர் எம்.உதயகுமார், மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.ரவீந்திரன், சமூக அபிவிருத்தி உதவியாளர் தெ.உதயசுதன், சமுதாய அடிப்படை அமைப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் பி.ஜசோபனா, சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச சமுதாய அடிப்படை அமைப்பு தலைவர், அலுவலக உத்தியோகத்தர்கள்,  உறுப்பினர்கள், மாணவர்கள், பிரதேச மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours