(சுமன்)


இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களுக்கிடையேயான விசேட கலந்தாய்வுக் கூட்டம்... 

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கோறளைப்பற்று - வாழைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினர்களுக்கிடையேயான விசேட கலந்தாய்வுக் கூட்டம்

13 திகதி வாழைச்சேனை கறுவாக்கேணியில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் அவர்களது கோறளைப்பற்று அரசியல் பணிமனை அலுவலகத்தில் இடம்பெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் அவர்களது தலைமையில் முன்னாள் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளைக் குழுவால் நியமிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கான சிறப்புப் பொறுப்பாளருமான தி.சரவணபவன் அவர்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர சீ.யோகேஸ்வரன், கோரளைப்பற்றுப் பிரதேச சபை உபதவிசாளர் உள்ளிட்ட சபையின் உறுப்பினர்கள், கட்சியின் கிரான் பிரதேசக் கிளைத் தலைவர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது குறித்த பிரதேச சபையில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள், பிரதேச அபிவிருத்தியில் ஏற்படும் சவால்கள் தொடர்பிலும் அவற்றைத் தீர்ப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய விடயங்கள் மற்றும் சபைகளின் செயற்பாடுகளை வினைத்திறனாக முன்னெடுத்து நிலைபேண் அபிவிருத்தியை வலுவூட்டும் நோக்குடன் மேற்கொள்ள வேண்டிய வழிவகைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours