எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு   

மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மத்திய நிலையமானது ஹிஜ்ரா நகர், தியாவெட்டுவான் பிரதேசத்தில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் அவர்களின் தலைமையில் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாடுச்சபையின் பணிப்பாளர் நாயகம் கே.கே.எஸ் கொத்தலாவல  பங்கு பற்றுதலுடன் போதைப்பொருள் முற்தடுப்பு மாவட்ட இணைப்பாளர் ப.தினேஸ் ஏற்பாட்டில்  இன்று (19) திறந்து வைக்கப்பட்டது

அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களினால் நாடளாவிய ரீதியில் போதைப்பொருளுக்கு எதிரான "முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் போதைப்பொருள் பாவனையினால் பாதிப்புக்குள்ளாகிய நபர்களுக்கான சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு வழங்குவதற்கான நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

" நீங்கள் தனியாக இல்லை - நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்" இங்கே மாற்றம் உருவாகிறது" எனும் கொள்கையின் கீழ் சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையம் செயற்படவுள்ளது.

போதைப்பொருள் அற்ற சமூகத்தை உருவாக்குவதன் மூலம் சிறந்த பிரஜைகளை உருவாக்க  முடியும் என இதன் போது அதிதிகள் கருத்து தெரிவித்தனர்.

இலங்கையில் முதல் முறையாக தமிழ் மொழி மூலமான போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மத்திய நிலையமாக சேவை வழங்கப்பட வுள்ளதுடன்

கடந்த வருடம் நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் தொடர்பாக சுமார் 290,000 நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந் நிகழ்வில்  கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எம்.பி.எம் முபாரக், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் ஏ.தாஹீர் , ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் எஸ்.எச். முசாமில், தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் வெளிக்கள உதவி பணிப்பாளர் நிலானி அலுத்கே, வடக்கு, கிழக்கு மாகாண இணைப்பாளர்  எம்.எம்.ஜி.பி. எம். ரசாட், பிராத்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர், உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் 1927 எனும் இலக்கத்திற்கு போதைப்பொருள் தொடர்பான முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும்  என்பதும் குறிப்பிடத்தக்கது.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours