திருப்பழுகாமம் ஸ்ரீகௌரிஅம்பிகா சமேத கேதீஸ்வரநாதர்(சிவன்)ஆலயத்தில் திருவெம்பாவை நிகழ்வுகள் கடந்த 25.12.2025 அன்று ஆரம்பமானது இறுதி நாளாகிய இன்று ( 03.01.2026) திருவெம்பாவை தீர்த்தோற்சவத்துடன் இனிதே நிறைவு பெற்றது.
திருவெம்பாவை பாடல்கள் சிவபெருமான்மேல் கொண்ட பரமபக்தியை வெளிப்படுத்துகின்றன. அகங்காரம், மமதை, அஞ்ஞானம் ஆகியவற்றை விட்டு இறைவனிடம் சரணடைதல் இதன் மைய கருத்தாகும்.
தோழிகள் ஒருவரையொருவர் எழுப்பி இறைவழிபாட்டிற்கு அழைப்பது போல, மனிதர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இறைவனை அடைய வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தையும் இது எடுத்துரைப்பதோடு
மார்கழி காலையில் திருவெம்பாவை பாடுவது மனத் தூய்மை, ஆன்மீக எழுச்சி, இறை அருள் பெறும் வழி எனக் கருதப்படுகிறது.
இந்நிகழ்வில் அதிகளவான பக்தர்கள் கலந்துகொண்டனர்.









Post A Comment:
0 comments so far,add yours