(ரஞ்சன்)





மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட எல்லைக் கிராம பகுதியில் நீண்டகாலமாக புனரமைக்கப்படாத பாலையடி வட்டாரத்தின் 37ஆம் கிராமம்,பாலையடிவட்டை,  புதுமுன்மாரிச்சோலை பிரதான வீதிகள் பிரதேசசபை தவிசாளர் வி.மதிமேனன் அவர்களின்  அனுமதியோடு உபதவிசாளர் த.கயசீலன் அவர்களின் தலைமையில் இன்று(28.01.2026)ஆம் திகதி செப்பனிடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மக்கள் போக்குவரத்து செய்வதில் மிகவும் கஸ்டங்களை எதிர்கொண்ட குறித்த வீதியை நீண்டகாலமாக குண்டும்,குழியுமாக கானப்பட்ட வீதியை  புனரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்த நிலையிலும் அதனை புனரமைக்க யாரும் நடவடிக்கையெடுக்காத நிலையில்,போரதீவுப்பற்று பிரதேச சபையினால் குறித்த வீதியை தற்காலிகமாக புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மழைகாலங்களில் வீதி சேர் பூசிய வீதியாக நீர் நிரம்பி காணப்படும் நிலையேற்படுவதனால் வீதிஊடாக பயனம் செய்யும் போது பாடசாலை மாணவர்கள்,விவவசாயிகள்,கர்ப்பினி தாய்மார்கள்,முதியோர்கள் மிகவும் சிரமத்தை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கின்றனர்.

இவ்வீதி ஊடாக அரசு பேருந்து வாகனங்கள் தனியார் பேருந்துகள் முச்சக்கர வண்டிகள் பயானம் செய்கின்றமையினால் உரிய நேரத்துக்கு பாடசாலைக்கு ஆசிரியர்கள் மாணவர்கள் செல்வது மற்றும் நோயாளிகள் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதில் தாமதங்கள் ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர்.

இன்று போரதீவுப் பற்று பிரதேசபை உப தவிசாளர் த.கயசீலன் தலைமையில்,மற்றும் பிரதேசசபை தொழிநூட்ப உத்தியோகஸ்தர்களின் மேற்பார்வையின் மூலம் நேற்று (27.01.2026)இன்று(28.01.2026)ஆம் திகளின்  கிறவல் மண் மூலம் வீதியினை பிரதேசசபை கனரக வாகனங்களின் உதவியுடன் செப்பனிடும் பணிககள் முன்னெடுக்கப்படுகின்றது.









Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours