(ரஞ்சன்)

மட்டக்களப்பு மாவட்டம் கோவில்போரதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் அறநெறிபாடசாலை ஏற்பாட்டில் சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான  கருத்தரங்கானது (14.01.2026)ஆம் திகதி நிறைவுபெற்றன.

கோவில் போரதீவு  கண்ணகி அம்மன் அறநெறி பாடசாலை ஏற்பாட்டில் நடைபெற்ற இலவச கல்விக் கருத்தரங்கு கடந்த தை 11,12,13,14 நாட்கள் முறையே வரலாறு, கணிதம், தமிழ், விஞ்ஞானம் என  நான்கு பாடங்களுக்கும் விசேட தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் மூலமாக நடைபெற்றதோடு இறுதி நாளான (14.01.2026 )ஆம் திகதி புதன்கிழமை விஞ்ஞான பாடத்திற்கான இறுதி இலவச கல்விக் கருத்தரங்குடன் இனிதே நிறைவு பெற்றது.

இந்த கல்விக் கருத்தரங்கில் அதிகளவிலான மாணவ மாணவிகள் கலந்து சிறப்பித்ததோடு அம்மாணவர்கள் அனைவருக்கும் இலவச பாடத்திட்ட பரீட்சை தொடர்பான கையேடுகள் மற்றும் கருத்தரங்கு முழுவதுமாக காலை ஆகாரம் வழங்கி வைக்கப்பட்டது.


அத்தோடு இறுதி விஞ்ஞான கருத்தரங்கு தினத்தில் வருகை தந்த மாணவ மாணவிகளுக்கு சமூக சேவையாளர் மார்க்கண்டு பரநிருபசிங்கம் அவர்களினால் கா.பொ.த.சாதாரண தர பரீட்சை எழுதுவதற்காக கற்றல் உபகரணங்கள் ( பேனா, பென்சில்) வழங்கி வைக்கப்பட்டது.

இன் நிகழ்வை ஏற்பாடு செய்த கோவில் போரதீவு கண்ணகி அம்மன் அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கும், போரதீவுப்பற்று பிரதேசசபையின் கோவில் போரதீவு  வட்டாரத்தின் பிரதேச சபை உறுப்பினர் மகேஸ்பரம் கோபிநாத் மற்றும் இணை நிதி அனுசரணை வழங்கிய மகேந்திரன் பஜிதரன், அழகு துரை ரமேஷ், கணேஷ் ராஜீ, கோவிந்தராசா மோகனதாஸ் ( தாஸ்) ஆகியோருக்கும்  கல்விக்கு கரம் கொடுத்த உதவும் உள்ளங்கள் அனைவருக்கும் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.










Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours