(கனகராசா சரவணன்)
மட்டக்களப்பு
பாலமீன்மடு பிரதேசத்தில் தித்வா புயலால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு வழங்கிய
நிதி முறைகேடு தொடர்பாக அமைக்கப்பட்ட விசேட குழு பார்வையிட்டதில்
முறைகேடு நடந்திருக்கின்றது எனவே அரசாங்க அதிபர் இதை கவனம் எடுத்து
பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த வெள்ள நிவாரணத்தை துரிதகதியில் வழங்குமாறு
ஈ.பி.டி.பி. கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் வர்த்தகருமான அந்தனிசில்
ராஜ்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு வொய்ஸ் ஒப்
மீடியாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை (08) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர்
இவ்வாறு தெரிவித்தார்.
தித்வா புயலால்
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிய நிவாரணத்தில் முறைகேடு
இருப்பதாக அறிந்து அதனை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.
விசேடமாக
பாலமீன்மடு பிரதேசத்தில் அரசியல் கட்சியின் தலையீடுகளால் மறைமுகமாக முதல்
கட்டமாக 24 பேருக்கு 25 ஆயிரம் ரூபா நிதி வழங்கப்பட்டது இதணையறிந்த
நாங்கள் ஜனாதிபதியின் செயலகத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தோம் இதனையடுத்து
விசேட குழு அமைக்கப்பட்டு அந்த குழு பாலமீன்மடு விற்கு சென்று
பார்வையிட்டனர்.
இந்த விசேட குழு காசிநாதர் வீதியை பார்வையிடவில்லை
அதேவேளை குழந்தை இயேசு வீதியை மட்டும் பார்வையிட்டு அதில் ஒருவருக்கு
மட்டும் நிதி வழங்கப்பட்டுள்ளது. உண்மையாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட
மக்களுக்கு இன்னும் நிவாரணங்கள் கிடைக்கவில்லை
இந்த முறைகேடான
செயற்பாடுகள் தொடர்பாக பொதுமக்கள் கடும் விமர்சனம் தெரிவிக்கின்றதுடன்
இலஞ்ச ஒழிப்பு பிரிவு மற்றும் ஜனாதிபதி செயலகத்தில் ஒப்படைக்குமாறு
என்னிடம் அவர்களின் வீடுகளுக்குள் வெள்ள நீர் நிற்பதை ஆவணங்களை ஆதாரமாக
சமர்ப்பித்துள்ளனர்.
உதாரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியான
நீதியை நீங்கள் பெற்றுக் கொடுக்க அவர்களுக்கு நிதியை வழங்காது ஒரு
சிலருக்கு மாத்திரம் நிதியை வழங்குவது முற்றிலும் தவறான விடையம்.
மட்டக்களப்பு
நகரில் 48 கிராம சேவகர் பிரிவுகள் இருக்கும் போது 40 பேருக்கு மட்டும்
வேதனத்தை வழங்கிவிட்டு 8 கிராம சேவகருக்கு வழங்காவிட்டால் அவர்கள்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவீர்கள் அது போல மக்களுக்கு உரிமை இருக்கின்றது
வெள்ளத்தால்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த 25 ஆயிரம் ரூபா கிடைக்காவிட்டால்
அவர்களுக்கு ஆதங்கம் இருக்கும் எனவே பாலமீன்மடுவில் விசேட குழு
அமைக்கப்பட்டதில் முறைகேடு இருக்கின்றது எனவே இதனை மாவட்ட அரசாங்க அதிபரின்
கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
அதேவேளை மக்கள் தந்துள்ள ஆவணங்களை
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் ஜனாதிபதி செயலகத்திற்கு வழங்க
இருக்கிறோம் பாலமீன்மடுவில் 178 பி என்கின்ற கிராம சேவகர் பிரிவில்
மொத்தமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 44 பேருக்கு நிதிகள்
வழங்கப்பட்டதாக தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக பெறப்பட்ட ஆவணத்தில்
சிலருடைய பெயர்கள் வரவில்லை இதில் எங்களுக்கு சந்தேகம் இருக்கின்றது
எனவே
இதனை கணக்காய்வு திணைக்களத்துக்கு விசாரணை செய்யும்படி அனுப்ப உள்ளோம்.
அதேவேளை அரசாங்க அதிபரிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம் மக்கள் வீதிக்கு
இறங்கி போராடுவதற்கு தயாராக இருக்கின்றனர் எனவே அவர்களை அசௌகரியங்களுக்கு
உள்ளாகாமல் நீங்களும் அசௌகரியங்களுக்கு உள்ளாகாமல் இந்த வெள்ள நிவாரணத்தை
துரிதகதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கவும் என வேண்டுகோள்
விடுத்துள்ளார்.
Post A Comment:
0 comments so far,add yours