( வி.ரி.சகாதேவராஜா)

 உலகளாவிய ராமகிருஷ்ண மிஷனின் கொட்டக்கலை சிவானந்த நலன்புரி நிலையத்தின் ஓர் ஆண்டு நிறைவு விழா  இன்று சனிக்கிழமை (21) நுவரெலியா கொட்டகலையில் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது.

 விழா மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தஜி மஹராஜ் தலைமையில் நடைபெற்றது. இலங்கை இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்த ஜீ மஹராஜ் மாணவர்களுக்கான ஆளுமை வளர்ச்சி உரையை வழங்கினார்

 அறநெறி நிகழ்வு ஆன்மீக நிகழ்ச்சிகள் மற்றும் ரதபவனி ஊர்வலம் என்பவற்றுடன் விழா ஆரம்பமாகியது .

நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இரண்டாம் நாள் பிரதான நிகழ்வில் பொதுக்கூட்டம், பாராட்டு நிகழ்வுகள் மற்றும் சிறப்பு உரைகள் இடம்பெறவுள்ளன.





.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours