சமாதான நீதவான்கள் தங்களது உயிர் வாழ் சான்றிதழினை கிராம உத்தியோகத்தரின் சிபாரிசுடன் பிரதேச செயலாளரின் அத்தாட்சிப்படுத்தலுடன் 2026 ஆண்டு மார்ச் மாதம் 31 ம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்க வேண்டுமென நீதி அமைச்சு அறிவித்துள்ளதுடன் இம்முறை வைத்திய சான்றிதலும் அத்துடன் இணைக்கப்படவேண்மெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு சமர்ப்பிக்கபடாவிட்டால் அவர்களது பதவி இரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டடுள்ளதுடன் புதிதாக சமாதான நீவான்கள் இணைத்துக்கொள்வது தொடர்பான விபரங்களும் 2025 ம் ஆண்டு ஜூன் மாதம் வெளியிடப்பட்ட வர்த்தமாணியில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வைத்திய அத்தாட்சிப் பத்திரம் சமர்ப்பிக்கும்போது அது இலங்கை வைத்திய சபையில் பதிவு செய்யப்பட்ட வைத்தியர் ஒருவரிடமிருந்து அது பெறப்பட வேண்டுமெனவும், "சமாதான நீதவான் சிறந்த தேகாரோக்கியத்துடன் இக்கடமையை நிறைவேறற்றக்கூடிய இயங்கு நிலையில் உள்ளார்" என்பதை குறிப்பிட்டு வைத்திய சான்றிதழ் பெறப்பட வேண்டுமெனவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சமாதான நீதவான் ஒருவர் க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்திருக்க வேண்டிய ஆறு பாடங்களில் ஆங்கில் பாடத்திலும் சித்தியடைந்திருந்தால் மாத்திரமே ஆங்கில மொழி மூலமான ஆவணங்களில் ஒப்பமிட வேண்டுமெனவும் அதில் விஷேடமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த உயிர் வாழ்தல் பற்றிய சான்றிதழ் மற்றும் மருத்துவச் சான்றிதழினை செயலாளர், நீதி அமைச்சு, இல : 19, ஸ்ரீ சங்கராஜ மாவத்தை, கொழும்பு - 10 எனும் முகவரிக்கு எதிர்வரும் 31.03.2026 திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்க வேண்டும்.
அத்தோடு அவற்றை பதிவுத் தபாலில் அனுப்பிவைக்கும் தபால் உறையின் இடது பக்க மேல் மூலையில் "சமாதான நீதவான் உயிர் வாழ்தல் சான்றிதழ்-2026" என குறிப்பிட்டு அனுப்பிவைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Home
Unlabelled
சமாதான நீதவான்களுக்கான உயிர் வாழ் சான்றிதழ்!
Subscribe to:
Post Comments (Atom)



Post A Comment:
0 comments so far,add yours