இன்றைய
தினம் மக்கள் எழுற்சியுடன் வவுனியாவில் முன்னெடுக்கப்படவுள்ள கிவுள் ஓயா
திட்டத்திற்கு எதிரான மக்கள் எழுச்சி போராட்டம் இன்று உணர்வெளிச்சியுடன்
நெடுங்கேணியில் இடம்பெற்றது.
தமிழ்
தேசிய கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த
குறித்த எதிர்ப்பு போராட்டம் காலை 10.30 மணிக்கு நெடுங்கேணி பேருந்து
நிலையத்தில் ஆரம்பமாகியது. இதன்போது கிவுள் ஓயா திட்டத்திற்கு எதிரான
பதாதைகளை மக்கள் தாங்கியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.
தொடர்ந்து மக்களும் நாமும் நெடுங்கேணி பிரதேச செயலகம் வரை ஊர்வலமாக கோசங்களை எழுப்பியவாறு சென்றிருந்தோம்.
அங்கும்
நாமும் ஒன்று கூடி எமது அகிம்சை முறை எதிர்ப்பு போராட்டத்தை நடாத்தினோம்
நெடுங்கேணி பிரதேச செயலாளரிடம் மகஜரொன்றையும் ஜனாதிபதிக்கு அனுப்புவதற்காக
வழங்கியிருந்தோம்.
குறித்த
ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசிய காட்சிகள் சேர்ந்த எம்.ஏ. சுமந்திரன்,
சி.வி.கே. சிவஞானம், சுரேஸ் பிரேமச்சந்திரன், க. துளசி, மு. சந்திரகுமார்,
பாராளுமன்ற உறுப்பினர்களான ப. சத்தியலிங்கம், சி. சிறிதரன், து. ரவிகரன்,
செல்வம் அடைக்கலநாதன் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பெரும்திரளான
மக்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
Post A Comment:
0 comments so far,add yours