( வி.ரி.சகாதேவராஜா)

காரைதீவு பிரதேசத்தில் அண்மையில் ஏற்பட்ட அடை மழையினால் தேங்கியிருந்த வெள்ளநீர் விவசாய நிலங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், விவசாயிகள் நலனை முன்னிறுத்தி காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் சு. பாஸ்கரன் நேற்று(21) சனிக்கிழமை தோணா வெட்டும் பணியை முன்னெடுத்தார்.

வெள்ளநீர் சரியாக வடிந்தோடாத காரணத்தால் பல ஏக்கர் பயிரிடப்பட்ட நிலங்கள் நீரில் மூழ்கியிருந்ததாக விவசாயிகள் தெரிவித்திருந்தனர். இதனால் பயிர் சேதம் ஏற்படும் அபாயம் நிலவியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலைமையை கருத்தில் கொண்டு, நீரோட்டம் சீராக செல்லும் வகையில் அவசர நடவடிக்கையாக தோணா வெட்டப்பட்டது. 

இதன் மூலம் தேங்கியிருந்த வெள்ளநீர் விரைவாக வெளியேறி, வயல்வெளிகளில் நீர் தேக்கம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்வில் உள்ளூர் விவசாயிகள் மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.

 விவசாயிகள் இந்த நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்து, எதிர்காலத்திலும் துரிதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours