நூருல் ஹுதா உமர்
முஸ்லிம் வாலிபர் சங்க (YMMA) மாவடிப்பள்ளி கிளையின் அனுசரணையில் மாவடிப்பள்ளி முஸ்லிம் வாலிபர் சங்க கிளையின் போசகர் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம். ஹில்மியின் ஏற்பாட்டில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நீர்த்தாங்கிகள் வழங்கி வைக்கப்பட்டது.
அம்பாறை மாவட்டத்தின் நீர்த்தாங்கிகள் வழங்கும் ஆரம்ப நிகழ்வு முஸ்லிம் வாலிபர் சங்க மாவடிப்பள்ளி கிளைத்தலைவரும், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின்
உத்தியோகத்தருமான எம்.எம்.சர்ராஜ் தலைமையில் மாவடிப்பள்ளி ஜும்ஆப் பள்ளிவாசலில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்க பேரவையின் அம்பாறை மாவட்டப் பணிப்பாளர் சிரேஷ்ட ஊடகவியலாளர் அதிபர் எம்.ஐ.எம்.றியாஸ், பிரதம அதிதியாகவும், முஸ்லிம் வாலிபர் சங்க பாலமுனை தலைவரும் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான ஐ.ஏ.ஸிறாஜ் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டு பயனாளிகளிகளுக்கு நீர்த்தாங்கிகளை உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தனர்.




Post A Comment:
0 comments so far,add yours