நூருல் ஹுதா உமர்
கொழும்பு மாநகர சபை உறுப்பினராக பதவி வகித்த ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் (United Peace Alliance) வண்ணாத்தி சின்ன முதன்மை வேட்பாளர் ஏ.எம்.ஜே.முஹம்மட் ஜவ்பர் அவர்கள் தனது உறுப்பினர் பதவியிலிருந்து உத்தியோகபூர்வமாக ராஜினாமா செய்தார்.
2025 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் சார்பில் வண்ணாத்தி சின்னத்தில் போட்டியிட்டு அதிக வாக்குகள் பெற்று மாநகர சபை உறுப்பினராக தெரிவான அவர், தனது ராஜினாமா கடிதத்தை கொழும்பு மாநகர சபை மேயர் விரை கல்லி பல்தாசர் அவர்களிடம் கையளித்துள்ளார்.
இது தொடர்பாக ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கலீலுர் ரஹ்மான் தெரிவித்ததாவது, கட்சியின் கொள்கையின்படி அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளர்களுக்கு சுழற்சி முறையில் மாநகர சபை உறுப்பினர் பதவி வழங்குவது வழக்கமாக இருந்து வருகிறது. உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலேயே அல்ஹாஜ் ஜவ்பர் முன்கூட்டியே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்றார்.
அவரது இடத்தை அடுத்து அதிக வாக்குகள் பெற்ற கொழும்பு வாழைத்தோட்டத்தைச் சேர்ந்த சகோதரர் பந்துள ரனவீர நிரப்பவுள்ளார். அவர் அடுத்த ஒரு வருட காலத்திற்கு மாநகர சபை உறுப்பினராக பதவியேற்று சேவையாற்ற உள்ளதாகவும் பொதுச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

Post A Comment:
0 comments so far,add yours