(சுமன்) 


வாழைச்சேனை பிரதேசத்தில் மக்கள் குடியிருப்புக்குள் புகுந்த யானைகளின் அட்டகாசத்தினால் பெண் ஒருவர் மரணம் அடைந்துள்ளதுடன் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை வாழைச்சேனை நாசிவந்தீவு ஆற்றின் வழியாக ஊருக்குள் புகுந்த மூன்று யானைகள் திசை தெரியாமல் பிரதேசத்தின் வெவ்வேறு பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் புரிந்ததில் பெண் ஒருவர் மரணம் அடைந்துள்ளதுடன் மூன்று பேர் காயமடைந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மரணமடைந்தவர் கொழும்பு றாகம் பகுதியை சேர்ந்த கொடிதுவக்கு ஆராய்ச்சிக்கே சிராணி (வயது 67) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார் தனது உறவினர் வீட்டுக்கு வருகை தந்திருந்த வேலையிலயே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

இதேவேளை வாழைச்சேனை இந்துக்கல்லூரி மதில் மற்றும் பொது மக்களின் மதில் நான்கு, மோட்டார் சைக்கிள் ஒன்று, முச்சக்கரவண்டி ஒன்று என்பவற்றை சேதப்படுத்தியுள்ளது.

குறித்த யானைகளை கிரான் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் பிரதேச பொது மக்களின் உதவியுடன் வாழைச்சேனை நாசிவந்தீவு ஆற்றின் வழியாக துறத்தி விட்ட போதும் பிரதேச மக்கள் அச்சத்துடனயே காணப்படுகின்றனர்.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours