(ரஞ்சன்)
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று நெல்லிக்காடு நாகன்னி அம்மன் ஆலயத்தில் இன்று(01.02.2026)ஆம் திகதி காலை 10மணிக்கு நடைபெறும் "நெற்புதிர் எடுத்தல்" (கதிர் எடுத்தல்) நிகழ்வானது ஆலயத்தின் பிரதம குரு சிவ ஸ்ரீ.த.றதன் குருக்களால் வயலுக்கு முன்னால் உள்ள வடுகனை வைரவர் ஆலயத்தில் பூசை வழிபாட்டுடன் நெற் புதுர் எடுத்தல் மிகவும் சிறப்பான முறையில் இடம் பெற்றன.இது உழவர் பெருமக்களின் வாழ்வோடும், நன்றியுணர்வோடும் கலந்த ஒரு நிகழ்வாகும்.
வழிபாட்டின் முக்கியத்துவமானதுதைப்பூசத்தன்று அதிகாலையில், வயலில் விளைந்த கதிர்களை அறுவடை செய்து வந்து இறைவனுக்குப் படைப்பது "நெற்புதிர்" எனப்படும்.
இது "விளைச்சல் பெருக அருள்புரிந்த இயற்கையையும் இறைவனையும் வணங்குவதைக்" குறிக்கிறது.
நெல்லிக்காடு நாகன்னி அம்மன் ஆலயத்தின் சடங்கு முறைகளாவன
மத்தள இசையுடன் பழய முறைப்படி மாட்டு வண்டியில் ஊர்வலமாகச் சென்று வயலில் இருந்து செழிப்பான நெற்கதிர்களை அறுப்பார்கள்
அறுக்கப்பட்ட நெற்கதிர்கள் புனித நீராட்டப்பட்டு,பூசை மேளதாளங்களுடன் ஊர்வலமாக நாகன்னி அம்மன் ஆலயத்திற்கு எடுத்து வரப்பட்டன.
கருவறையில் வீற்றிருக்கும் நாகன்னி அம்மனின் பாதங்களில் இந்த நெற்கதிர்களை வைத்துச் சிறப்புப் பூசைகள் செய்யப்பட்டன.
பூசை முடிந்த பிறகு, அந்தப் புனிதமான நெற்கதிர்கள் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். பக்தர்கள் இதனைப் பெற்றுச் சென்று
தங்கள் வீட்டு நிலைப்படியில் கட்டுவார்கள்.நெற்களஞ்சியத்தில் வைப்பார்கள்.
இவ்வாறு செய்வதால் ஆண்டு முழுவதும் உணவுப் பஞ்சம் வராது என்பதும், செல்வம் பெருகும் என்பதும் ஐதீகம். எனக் கூறப்படுகின்றன.

.jpeg)
.jpeg)


.jpeg)

.jpeg)
Post A Comment:
0 comments so far,add yours