கல்முனை மாநகர சபை நிர்வாகத்தின் கீழ் உள்ள மருதமுனை KMC பாலர் பாடசாலையின் வித்தியாரம்ப விழா இன்று வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.
மருதமுனை பொது நூலகத்தின் நூலகர் எஸ்.எம்.ஆர். அமீனுதீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
அத்துடன் கல்முனை மாநகர சபையின் முன்னாள் உதவி ஆணையாளரும் தற்போதைய உகன பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளருமான ஏ.எஸ்.எம். அஸீம், மருதமுனை ஜம்மியதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் அஹமதுல் அன்ஸார் மெளலானா, மருதமுனை ஷெய்னப் மகளிர் அரபுக் கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் ஏ.எச். றிபான், மருதமுனை அந்நஹ்ழா அரபுக் கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் ஏ.எச். பர்ஸான், மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியின் பிரதி அதிபர் எம்.சி.ஏ. நஸார், ஓய்வுபெற்ற அதிபர்களான ஏ.எம்.எம். பாறுக், ஏ.ஆர்.ஏ. றசூல்ஆகியோர் கெளரவ அதிதிகளாக கலந்து கொண்டிருந்தனர்



.jpeg)
.jpeg)


Post A Comment:
0 comments so far,add yours