(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

பிரஜாசக்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், கிராமசேவகர் பிரிவுக்கு ஒரு வீடு திட்டத்தின் கீழ், தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசம் உட்பட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு புதிய வீடுகளை அமைத்துக் கொள்வதற்கான ஆரம்பகட்ட அடிக்கல் நடும் நிகழ்வு அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவாவினால் கல்முனையில் (08)  ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வுகளில், பிரதேச செயலாளர், அம்பாறை மாவட்ட தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட உத்தியோகத்தர்கள், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் பொறியியலாளர்கள் மற்றும் பிரதேச செயற்பாட்டாளர்கள், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர், பிரஜாசக்தி தவிசாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours