( வி.ரி. சகாதேவராஜா)
கிழக்கு
மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் சம்மாந்துறை பிரதேச செயலகம் மற்றும்
சம்மாந்துறை பிரதேச சபையும் இணைந்து நடத்திய கிழக்கு மாகாணமட்ட இப்தார்
நிகழ்வு நேற்று(10) செவ்வாய்க்கிழமை மாலை சம்மாந்துறை ஜனாதிபதி விளையாட்டு
தொகுதியில் நடைபெற்றது.
கிழக்கு
மாகாண கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி மேனகா புவிக்குமார்
தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர்
பேராசிரியர் நந்தலால் ரத்ன சேகர கலந்து சிறப்பித்தார்.
மேலும்
அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா, அம்பாறை மாவட்ட
பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் , சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ் எல்
எம்.ஹனிபா சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐஎல்எம். மாஹிர் உள்ளிட்ட
பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.



Post A Comment:
0 comments so far,add yours