(  வி.ரி.சகாதேவராஜா)


இலங்கை புதிய அலை கலை வட்டத்தின் ஏற்பாட்டில் கலை, இலக்கியம், ஊடகம், ஆன்மீகம் மற்றும் சமூகப் பணிகளில் ஈடுபட்டுவரும் 20 பெண்கள்  நேற்று முன்தினம் (7) சனிக்கிழமை வீர வனிதையர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்கள்.

அந்த வகையில், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் திருமதி ஹேமலோஜினி குமரன் அவர்களும்
 "வீர வனிதையர்", விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

பிரதம அதிதியாக கலந்துகொண்ட மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அந்த விருதினை வழங்கி வைத்தார். 

இவர் உதவி பணிப்பாளராக இருந்து அறநெறி கல்வியினுடைய மறுமலர்ச்சிக்கு சிறப்பான முறையில் பங்களிப்பை நல்கிய பெண்மணியாவார்.

 அதேபோன்று சிறந்த மமூக சமயப் பற்றாளர் .
சமூகத்தின் விடிவுக்காக தன்னை அர்ப்பணித்து  காத்திரமான பணி செய்த ஒருவராவார்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours