(ரஞ்சன்)
மட்டக்களப்பு - வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெல்லாவெளி கல்லடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக இன்று (20.03.2026) பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
37ஆம் கிராமத்தில் விவசாய நிலங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வந்தவருடன், காக்காச்சிவட்டை கிராமத்தில் இடம்பெற்ற மரணச்சடங்கு ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு மண்டூர் நோக்கிப் பயணித்த மற்றுமொரு மோட்டார் சைக்கிள் பின்னால் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த மோதலில் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் பலத்த சேதமடைந்துள்ளன.விபத்தில் காயமடைந்த இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post A Comment:
0 comments so far,add yours