(வி.ரி.சகாதேவராஜா)

கல்முனை ரோட்டரி கழகத்தின் செயலாளர் ரோட்டரியன்  கணபதிப்பிள்ளை குகதாஸ்( வயது 67) நேற்று(4) புதன்கிழமை இரவு கொழும்பில் காலமானார்.

பெரிய கல்லாற்றைச் சேர்ந்த பிரபல சமூக சேவையாளர் குகதாஸ் மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக விவசாய கைத்தொழில் சம்மேளன முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும்,  தனியார் பல்கலைக்கழக மட்டக்களப்பு இணைப்பாளராகவும் சேவையாற்றி வந்தவர். 
இவரது காலத்தில்தான் சர்வதேச வர்த்தக கண்காட்சி மட்டக்களப்பில் தலைவர் வி.ரஞ்சிமூர்த்தி தலைமையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இருதய சத்திரசிகிச்சையின் பின்னர் கொழும்பில் தங்கியிருந்த வேளையில் மரணமானார்.

துபாயில் பணியாற்றும் துஜிப்சாந்த் மற்றும் ஹபித் ஆகியோரின் தந்தையான இவர் சமூக சேவையாளர் ஆவார்.
 
அன்னாரின் ஈமக்கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (8) மாலை 4 மணிக்கு பெரியகல்லாறு உறவுகள் உறங்கும் இல்லத்தில் இடம்பெறும் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours