( வி.ரி. சகாதேவராஜா)
 கல்முனை  ஆதார வைத்தியசாலையில்  சர்வதேச மகளிர் தினம்  வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் சுகுணன் குணசிங்கம்  தலைமையில் நேற்று (13) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

 வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் தாஹிரா சபியுதீனின் வழிகாட்டலின்படி ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் விசேட அதிதிகளாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்  டாக்டர் எஸ்.இஸ்ஸதீன், கல்முனை தெற்கு பிரதேச செயலகத்தின் மகளிர் அபிவிருத்தி அதிகாரி திருமதி ஜெனிதா மோகன், மற்றும் கல்முனை வடக்கு சுகாதார சேவைகள் பணிமனையின் பொது சுகாதார தாதிய சகோதரி திருமதி சீஎம்.பெரேரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் நலன் விரும்பிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.








Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours