(ரஞ்சன்)

மட்டக்களப்பு மாவட்டம் 

போரதீவுப்பற்று பிரதேச சபையில் நீண்டகாலமாகப் பணியாற்றி, இடமாற்றம் பெற்றுச் செல்லும் சிரேஷ்ட உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் விடுகை விழா இன்று (26.03.2026)ஆம் திகதி  பிற்பகல் 3.30 மணியளவில் பிரதேச சபையின் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

சபையின் செயலாளர் திரு. எஸ். பகீரதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இடமாற்றம் பெற்றுச் செல்லும் உத்தியோகத்தர்களின் சேவை மற்றும் அர்ப்பணிப்பு குறித்துப் பாராட்டி கௌரவிக்கப்பட்டது.

இவ் நிகழ்வில் பின்வரும் உத்தியோகத்தர்கள் உத்தியோகபூர்வமாகக் கௌரவிக்கப்பட்டனர்.

​திருமதி ரஜீதா ஜெயக்குமார்  (பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்) போரதீவுப்பற்று பிரதேச சபையில் தனது கடமைகளைச் செவ்வனே நிறைவு செய்து, நாளை (27.03.2026) ஆம் திகதி முதல் களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் தனது பணியைத் தொடரவுள்ளார்.

திரு. அரசரெத்தினம் குபேரலிங்கம் (நிதி உதவியாளர்)சபையின் நிதிப் பிரிவில் காத்திரமான பங்களிப்பை வழங்கிய இவர், நாளை (27.03.2026) ஆம் திகதி முதல் பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்திற்கு இடமாற்றம் பெற்றுச் செல்கின்றார்.

நிகழ்வின் போது உரையாற்றிய செயலாளர் மற்றும் சக உத்தியோகத்தர்கள், இடமாற்றம் பெற்றுச் செல்லும் இருவரின் பணிக் காலங்களில் அவர்கள் காட்டிய வினைத்திறன் மற்றும் நட்புறவு குறித்து சேவை நலன் பாராட்டு உரைகளை நிகழ்த்தினர்.

சபையின் வளர்ச்சிக்கு அவர்கள் வழங்கிய ஒத்துழைப்பு நன்றியுடன் நினைவு கூரப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதேச சபையின் அனைத்துப் பிரிவு உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டு, இடமாற்றம் பெற்றுச் செல்லும் உத்தியோகத்தர்களுக்குத் தமது வாழ்த்துக்களையும் நினைவுச் சின்னங்களையும் வழங்கி வழியனுப்பி வைத்தனர்.









(ரஞ்சன்)

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours