(நிதாகரன்)மட்டக்களப்பு திருப்பழுகாமம் ஸ்ரீ கௌரிஅம்பிகா சமேத கேதீஸ்வர நாதர் (சிவன்) ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழாவானது எதிர்வரும் 23.03.2026 திங்கட்கிழமை அன்று காலை 10.00மணிக்கு திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. தொடர்ந்து ஒன்பது நாட்கள் திருவிழாக்கள் இடம்பெறுவதுடன் உற்சவ காலங்களில் காலை உற்சவம் தினமும் அதிகாலை 5.00மணிக்கு யாக பூசையுடன் ஆரம்பமாகும்.மாலை உற்சவம் 6.00 மணிக்கு பஜனையுடன் ஆரம்பமாகி தம்ப பூஜை இடம்பெற்று இரவு 8.00 மணிக்கு வசந்த மண்டப பூசை,சுவாமி உள்வீதி,வெளிவீதி உலா என்பன சிறப்பாக நடைபெறும்.திருவிழாக்கால பூசைகள் சிவஸ்ரீ தெ.கு.ஜனேந்திரராசா குருக்கள் தலைமையில் இடம்பெறும். பத்தாம் நாளாகிய 01.04.2026 அன்று புதன்கிழமை தீர்தோற்சவத்துடன் இனிதே நிறைவுபெறும்.
Share To:

Post A Comment:

0 comments so far,add yours