(கனகராசா சரவணன்;)



மட்டக்களப்பில் டீசலில் ஓடும் வாகனங்கள் மண்ணெண்ணையில் ஓடுகின்றது  இதனால் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் அபாய நிலையால் மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவே இந்த பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அறிவுறுத்தலையும் மீறி சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் டீசல் வாகனங்களுக்கு  மண்ணெண்னை வழங்கி வருகின்ற இந்த சட்டவிரோத செயற்பாட்டை கண்டறிந்து அதற்கான சட்ட நடவடிக்கையை எடுக்குமாறு அரசாங்க அதிபரிடம் ஈ.பி.டி.பி கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வர்த்தகருமான அந்தனிசில் ராஜ்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு பாலமீன்மடுவில் உள்ள அவரது காரியாலயத்தில் இன்று சனிக்கிழமை (07) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தற்போது மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள யுத்த சூழல் காரணமாக இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ள நேரத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும்  மண்ணெண்ணை   எல்லா எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் டீசல் வாகனங்களுக்கு பயன்படுத்துகின்றனர்.


பெற்றோலிய கூட்டுதாபனத்தினால் 26-6-2025 ம் ஆண்டு அனைத்து எரிபொருள் விநியோகிக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் பிராந்திய முகாமையாளரிடம் இருந்து டீசலில் ஓடும் வாகனங்களுக்கு மண்ணெண்ணெய் வழங்க வேண்டாம் என்றும் மண்ணெண்ணையை பயன்படுத்துவதை நிறுத்துமாறு கடிதம் மூலம் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

இப்போது மட்டக்களப்பில் டீசலை விட தனியார் பேருந்துகள், பார ஊர்திகள், போன்ற வாகனங்கள் மண்ணெண்ணையில் ஓடிக் கொண்டிருக்கின்றனர். மீன்பிடியில் ஈடுபடும் வெளி இயந்திர படகு உரிமையாளர்கள், மண்ணெண்னை முடிந்து போனால்  டீசலில் இந்த இயந்திர படகுகள் இயங்க முடியாது.

வடக்கு கிழக்கில் நவம்பர் மாதத்திலிருந்து மார்ச் மாதம் வரைக்கும் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாது. மீனவர்கள்; மார்ச் மாதத்தில் இருந்து நவம்பர் மாதம் வரைக்கும் கடலுக்கு செல்லும் காலம் அந்த காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படுகின்ற மண்ணெண்ணெய் டீசல் வாகனங்களுக்கு வழங்கினால் பாதிக்கப்பட போவது மீனவர்கள்.

கரடியனாறு பிரதேசத்தில் கனரக வாகனங்களை சோதனை செய்தால் தெரியும் எவ்வளவு டீசல் வாகனங்கள் மண்ணெண்ணையில் ஓடுகின்றதுடன் இன்று மாவட்டத்தில்  டீசலின் விற்பனையை விட மண்ணெண்ணெய் விற்பனை அதிகரித்துள்ளது.


இவ்வாறு மண்ணெண்ணெய் டீசல் வாகனங்களுக்கு பயன்படுத்துவதற்கு தொடர்ந்து எல்லா எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் ஒரு கட்டுப்பாடு இன்றி விநியோகம் செய்தால் எதிர்வரும் மாதத்தில் மீனவர்கள் மண்ணெண்னை இன்றி கடலுக்கு செல்ல முடியாத அசாதாரண சூழ்நிலை ஏற்படும்.

கடந்த காலத்தில் ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு மட்டுப்படுத்தப்பட்ட  மண்ணெண்னை மாத்திரம்  வழங்கப்பட்டது இந்த மண்ணெண்னை ஒரு எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு மாதம் ஒன்றுக்கு ஒரு பவுசர் என்ற அடிப்படையிலும் சில மீனவர்கள் அண்டிய பிரதேசங்களில் இருக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இரண்டு பவுசர் என்ற அடிப்படையில் வழங்கப்பட்டது.


ஆனால் பெற்றோலிய கூட்டுத்தாபனம் எல்லா எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் கடிதம் அனுப்பியும் அந்த கடிதத்தை கருத்தில் கொள்ளாது சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கலனில் மண்ணெண்ணையை கொடுக்காமல் டீசல்  வாகனங்களுக்கு அங்கு வைத்து மண்ணெண்ணையை நிரப்பி அனுப்புகின்றனர்.

எனவே கடந்த காலத்தில் செயல்படுத்தியது போல மீனவர்கள் அண்டிய பிரதேசத்தில் இல்லாத எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டு மண்ணெண்ணை  வழங்குமாறு பெற்றோலிய கூட்டு தாபனத்திடம் கோரிக்கையை முன்வைக்கின்றோம்.


அதேவேளை மாவட்டத்தில் இந்த சட்டவிரோத செயற்பாட்டை கட்டுப்படுத்துவதற்கான விசாரணைகளை அரசாங்க அதிபர் தலைமையில் பொலிசார் உள்ளிட்ட அரச அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து வீதி சோதனைகளை செய்து இந்த மண்ணெண்ணையில் ஓடுகின்ற வாகனங்களை கண்டறிந்து அதற்கான சட்ட நடவடிக்கையை எடுக்குமாறு அதிபரிடம் வினயமாக கேட்டுக் கொள்கின்றோம்.


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு அரசாங்கத்தால் பல நிவாரணங்கள் அறிவிக்கப்பட்ட போதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மீனவர்களுக்கான நிவாரணம் எதுவும் வழங்கப்படவில்லை. ஆனால் கடந்த அரசாங்கத்தில் கடற்றொழில் அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தா மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் மானியம், வீடுகள், உலர் உணவு பொதிகள் என சலுகைகளை வழங்கியிருந்தார்.;

கடந்த காலத்தில் மழை பெய்த போது நெல்லை காய வைக்காமல் விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டார்கள். எனவே வெள்ளம் வந்த பின்னர் அணை கட்டுவதில் எந்த பயனும் இல்லை ஆகவே விவசாயிகள் பாதிக்கப்பட்டது போல மீனவர்களும் பாதிக்கப்பட கூடாது

வாழைச்சேனை, களுவங்கேணி, பாலமீன்மடு ஆகிய பிரதேசங்களில் மீனவர்களுக்காகன மண்ணெண்னை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது இவற்றுக்கு மண்ணெண்ணையை வழங்கி ஏனைய எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இந்த மண்ணெண்யையை மட்டுப்படுத்தி வழங்காமல் விட்டால் எதிர்வரும் காலங்களில் மீனவர்களுக்கான மண்ணெண்ணெய் தட்டுபாடு ஏற்படும். இதனால் மீனவர்கள். விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.  

எனவே எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு செயற்படவும். என்றார். 
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours