இ.சுதாகரன்
பட்டிருப்பு
வலயக்கல்விப் பணிமனையின் நிருவாக எல்லைக்குட்பட்ட கோட்டைக்கல்லாறு
கிராமத்திலுள்ள கோட்டைக்கல்லாறு மகாவித்தியாலயம் ,கல்முந்தல் திருவள்ளுவர்
வித்தியாலயம், கண்ணகி வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளை
பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அதிபர்கள் ஆசிரியர்களுக்கான செயலமர்வு
கோட்டைக்கல்லாறு கண்ணகி வித்தியாலயத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
செயலமர்வில்
பிரதான வளவாளராக பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் சிவஞானம் சிறிதரன்
மற்றும் திறந்த பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்
ஆர்.விவேகானந்தராசா மற்றும் ஆசிரிய ஆலோசகர் கவியரசன் ஆகியோர் கலந்து கொண்டு
பாடசாலை மட்ட முகாமைத்துவ வலுவூட்டும் தொடர்பாக அதிபர் மற்றும் பகுதித்
தலைவர்கள், ஆசிரியர்களுக்கு தெளிவூட்டல்களை முன்னெடுத்த மை
குறிப்பிடத்தக்கது.



Post A Comment:
0 comments so far,add yours