எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் "முழு நாடும் ஒன்றாக" "ரட்டம எகட்ட " விஷபோதைப் பொருள் தடுப்பு வார அங்குராப்பண நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட போதைப்பொருள் தடுப்பு உத்தியோகத்தர் ப.தினேஸ் ஏற்பாட்டில் புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (03) இடம் பெற்றது.
தேசிய செயற்பாட்டு சபையினால் நாடளாவிய ரீதியில் விஷ போதைப்பொருள் விற்பனை விநியோகத்தை கட்டுப்படுத்தல் மற்றும் பயன்பாட்டில் அடிமையானவர்களை பழக்கத்திலிருந்து விடுவிட்டதற்கும் புனர்வாழ்விற்கான ஆற்றுப்படுத்தல் விழிப்புணர்வு போன்ற பல செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
இதனை முன்னிட்டு மாவட்ட ரீதியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் துண்டு பிரசுரங்கள் மற்றும் ஸ்டிக்கர்கள் வழக்கப்பட்டன.
இந் நிகழ்வில் பிரதி பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் மோகனகுமார், 243 படைப்பிரிவின் பிரிகேடியர் ராஜபக்ச, விமானப்படை உயர் அதிகாரிகள், விசேட அதிரடிப்படை அதிகாரிகள், போதைப்பொருள் முற்தடுப்பு உத்தியோகத்தர்கள், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், திணைக்களம் சார் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
.jpeg)
.jpeg)
.jpeg)


Post A Comment:
0 comments so far,add yours