மட்டக்களப்பு மாவட்டம், போரதீவுப்பற்று பிரதேச சபையில் நீண்டகாலமாக சுகாதாரத் தொழிலாளியாக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அ. அருளானந்தம் அவர்களுக்கு நேற்றைய தினம் (06.03.2026) ஆம் திகதி கலாசார மண்டபத்தில் சிறப்பானதொரு பாராட்டு மற்றும் பிரியாவிடை நிகழ்வு இடம்பெற்றது.
பிரதேச சபையின் தவிசாளர் வி. மதிமேனன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சபையின் உத்தியோகஸ்தர்கள் மற்றும் சக ஊழியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி தனது முதல் நியமனத்தைப் பெற்றுக்கொண்ட திரு. அருளானந்தம் அவர்கள், சுமார் 13 ஆண்டுகளுக்கும் மேலாக போரதீவுப்பற்று பிரதேச சபையின் தூய்மை மற்றும் பொது சுகாதாரத்திற்காக அயராது உழைத்தவர்.
இன்று (2026.03.07) அவர் தனது உத்தியோகபூர்வ சேவையிலிருந்து ஓய்வுபெறுகின்றார்.விலைமதிப்பற்ற சேவைநிகழ்வின் போது தலைமை உரையினை ஆற்றிய தவிசாளர், ஒரு நிறுவனத்தின் தூய்மைக்கும் ஆரோக்கியத்திற்கும் பின்னணியில் இருக்கும் சுகாதாரத் தொழிலாளர்களின் சேவை விலைமதிப்பற்றது என சுட்டிக்காட்டினார்.
அத்துடன், அருளானந்தம் அவர்கள் ஏனைய ஊழியர்களுடன் பேணிவந்த நற்புறவு மற்றும் கடின உழைப்பு குறித்தும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.
அவரது நீண்டகால சேவையை கௌரவிக்கும் முகமாக அவருக்கு நினைவுப் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன. சக ஊழியர்கள் உணர்வுபூர்வமாக அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், அவரது ஓய்வுக்கால வாழ்வு இனிதாகவும் ஆரோக்கியமாகவும் அமைய இறைவனைப் பிரார்த்தித்தனர்.

.jpeg)

.jpeg)




.jpeg)
Post A Comment:
0 comments so far,add yours