(கனகராஜா சரவணன்)

மட்டக்களப்பு கல்லடியில்  நீண்டகாலமாக கசிப்பு வியாபாரத்தின் பிரதான நிலையமாக இயங்கி கசிப்பு விற்பனை நிலையத்தை நேற்று புதன்கிழமை (8) மாலையில்  முற்றுகையிட்ட பொலிசார் பெயர் போன கசிப்பு வியாபரியான பெண் ஒருவரை 105 போத்தல் கசிப்புடன் கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.


மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்தினவின் ஆலோசனையில் மட்டு தலைமையப பொலிஸ் நிலைய பொறுப்பதரிகாரி பிரியந்த பண்டாரவின் வழிகாட்டலில் போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் உப பரிசோதகர் சந்தன தலைமையில் சாஜன் ஜெயசிங்க, அஜித், பொலிஸ் கொஸ்தாப் பர்களான ரதன், கொடிகார, ஜெயரத்தின கொண்ட குழுவினர் சம்பவதினமான நேற்று பகல் கல்லடி வேலூர் 4ம் குறுக்கு வீதியில் வீட்டை சுற்றி உயரத்தில் மதில் அமைத்து அதில் சிசிரிகமாரக்கள் பொருத்தப்பட்டு வீட்டை முற்றுகையிட்டனர்


இதின் போது அங்கு கசிப்பு வியாபரத்தில் ஈடுபட்டுவந்த பெண்ணை கைது செய்ததுடன் 105 போத்தல் கசிப்பை மீட்டனர்


இதேவேளை காத்தான்குடி பொலிஸ் பிரிவில் உள்ள குறித்;த பெண் வீட்டினை சுற்றி உயரமாக மதில் அமைத்து சிசிரி கமராக்களை பொருத்தி நீண்டகாலமாக கசிப்பு வியாபரத்தில் ஈடுபட்டு வந்துள்ள இவர் பொலிசார் வீட்டை முற்றுகையிடும் போது சிசிரி கமராவில் பார்த்து கொண்டதும் வீட்ன் கதவை மூடி வீட்டில் யாரும் இலாததுபோல வீட்டுக்குள் இருந்து கொண்டு  பொலிசார் போன பின்பு வியாபாரத்தில் ஈடுபட்டுவார். என்பதுடன் இவருக்கு எதிராக பொதுக்கள் பொலிசாரிடம் பல முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடதக்கது 

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours