ஈழத்தின் புகழ்பெற்ற மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேசத்தின், 37ம் கிராமம் கூழாவடி நெல்லிக்காடு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ நாககன்னி அம்மன் ஆலயத்தின் 2026ஆம் ஆண்டுக்கான வருடாந்த திருச்சடங்கு உற்சவம் (25.04.2026)ஆம் திகதி சனிக்கிழமை பக்திபூர்வமாக ஆரம்பமாகவுள்ளது.
ஆலய வரலாறு மற்றும் சிறப்புகள்
இயற்கை வளம் சூழ்ந்த 37ம் கிராமத்தில், கடந்த 1999ஆம் ஆண்டு முதல் கோயில் கொண்டுள்ள ஸ்ரீ நாககன்னி அம்மன், இப்பகுதி மக்களின் கண்கண்ட தெய்வமாக விளங்குகின்றார்.
சோதிடம் மூலமாக மக்களின் தீராத நோய்களைத் தீர்த்தல், பில்லி சூனியம் மற்றும் வசியத் தடைகளை அகற்றுதல் என அடியவர்களின் அல்லல் நீக்கி, கேட்ட வரம் கொடுக்கும் கலியுக வரப்பிரசாதியாக அன்னை போற்றப்படுகின்றார்.
திருச்சடங்கு விபரங்கள்.
நிகழும் "பராபவ' வருடம் சித்திரை மாதம் 12ஆம் நாள் (25.04.2026) சனிக்கிழமை, ஆயிலிய நட்சத்திரமும் தசமி திதியும் கூடிய சுப முகூர்த்தத்தில் திருக்கும்பம் வைத்தலுடன் சடங்கு நிகழ்வுகள் ஆரம்பமாகும்.
தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெறும் விசேட பூசைகள் மற்றும் சடங்குகளைத் தொடர்ந்து, சித்திரை மாதம் 17ஆம் நாள் (30.04.2026)ஆம் திகதி வியாழக்கிழமை சதுர்தசி திதியுடன் கூடிய சுப வேளையில், அன்னையின் கும்பம் சொரிதலுடன் விழா இனிதே நிறைவுபெறும்.
இந்த வருடாந்த மகா உற்சவத்தில் நாட்டின் நாலாபுறங்களிலிருந்தும் சைவசமய மெய்யடியார்கள் வருகை தந்து, அன்னையின் பேரருளையும் ஆசியையும் பெற்றுச் செல்லுமாறு ஆலய நிர்வாகத்தினர் மற்றும் அடியவர்கள் அன்புடன் அழைக்கின்றனர்....

Post A Comment:
0 comments so far,add yours