வேப்பையடி கலைமகள் மகா வித்தியாலய பாடசாலையின் அதிபர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இணைந்த கரங்கள் உறவுகள் ஊடாக பயணிக்கும் கண்ணன் வேல்முருகு அவர்களின் 60 வது பிறந்த தினத்தினை முன்னிட்டு 28.04.2926  அன்று பாடசாலையில் மாணவர்களின் நலன் கருதி குடிநீர் வசதி மற்றும் மேலதிக  வகுப்புகளான  கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், கணனி ஆகிய நாண்கு பாடங்களும் அங்குரார்ப்பான நிகழ்வு   பாடசாலையின் அதிபர் க.தியாகராஜா தலைமையில் 

.இந்நிகழ்வில்  வலுவூட்டப்பட்ட பாடசாலை மேம்பாட்டு  இணைப்பாளர்  எம்.ஏ.அஸ்வர்  ஓய்வு பெற்ற ஆசிரிய ஆலோசகர் சா.மோகன்  பிரதி அதிபர் எம் .தருமலிங்கம் கலந்துகொண்டதுடன் கெளரவ அதிதிகளாக கண்ணன் அனோமிகா. கண்ணன் அகஸ்திகா கலந்துகொண்டு   அவர்களது  கரங்களினால் குடிநீர் திட்டம் உத்தியோக பூர்வமாக  திரைநீக்கம் செய்யப்பட்டு  குடிநீர் இணைப்புக்கள்  திறந்து வைக்கப்பட்டன. 

இணைந்த கரங்கள் சார்பாக காந்தன் மற்றும் அம்பாரை மாவட்டத்தில்  உயிரியல் பிரிவில் முதல் நிலையை பெற்ற மாணவன் ரமேஸ் தேஜித் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours