நூருல் ஹுதா உமர் 

சாய்ந்தமருது சமுர்த்தி வங்கி மற்றும் சமுர்த்திப் பிரிவின் 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் பிரதேச செயலாளர் எம்.எம். ஆசீக் தலைமையில் சமுர்த்தி மகா சங்க கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

சமுர்த்தி தலைமை பீட சிரேஷ்ட முகாமையாளர் ஏ.சீ.ஏ.நஜீம் அவர்களின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இம் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் சமுர்த்தி வங்கி, வலய மற்றும் திட்ட முகாமையாளர் றியாத் ஏ. மஜீத், சமுர்த்தி வங்கிச் சங்க முகாமையாளர் எஸ்.றிபாயா உள்ளிட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

இதன்போது வங்கியின் முன்னேற்றங்கள், மக்களுக்கான வாழ்வாதார திட்டங்கள், இளைஞர், யுவதிகளுக்கான புலமைப்பரிசில் தொழில் பயிற்சி கற்கை நெறிகள் சமுதாய அடிப்படை அமைப்புக்களின் (CBO) செயற்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours