---- 
(எம்.என்.எம்.அப்ராஸ்) 

 எதிர்வரும் தமிழ்,சிங்கள புத்தாண்டை முன்னிட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஷகிலா இஸ்ஸதீன் அவர்களின் நெறிப்படுத்தலில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி ஸஹ்ரா சாரப்தீன் வழிகாட்டலில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஜே.எம். நிஜாமுதீன் தலைமையில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட கல்முனை பொது சந்தை பகுதியில் உணவகங்கள் மற்றும் வீதியோர மரக்கறி விற்பனை நிலையங்கள் பொது சுகாதார பரிசோதகர்களினால் இன்று (08) பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன. 

இதன்போது மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற பழுதடைந்த மரக்கறி வகைகள் ,உணவுப் பொருட்களும் கைப்பற்றப்பட்டு சுகாதார விதிமுறைகளை மீறிய விற்பனையாளர்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் சுகாதார விதிமுறைகள்,உணவு பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் தேவையான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன. 


பொது சுகாதார பரிசோதகர்களான எம். ஜூனைதீன், ஐ.எல்.எம் இத்ரீஸ், கே.எல். மன்சூர் , ஆர். எம். முஹ்சீன் ஆகியோர் மேற் குறித்த பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours