க.விஜயரெத்தினம்)
மட்டக்களப்பு
மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட
பகுதிகளிலுள்ள வறிய மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களும், குடும்பங்களை
தலைமைதாங்கும் பெண்களின் தொழில் முன்னேற்றத்திற்கான நிதி உதவிகளும்
திங்கட்கிழமை(20) மாலை வழங்கிவைக்கப்பட்டது.
"சமூகங்களை
இணைத்தல்","அமைதியை கட்டி எழுப்புதல்" மட்டக்களப்பில் இளைஞர் மற்றும்
மகளிர் தலைமைத்துவத்தின் மூலம் சமூக நல்லிணக்கத்தையும் பாதுகாப்பையும்
பலப்படுத்துதல்" என்ற திட்டத்தின் கீழ் சர்க்கிள் இளம் பெண்கள் அமைப்பின்
ஏற்பாட்டிலும் யுனோப்ஸ் மற்றும் விரித்தி அமைப்பின் பங்களிப்பிலும் இவை
வழங்கி வைக்கப்பட்டன.
மட்டக்களப்பு
ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட களுவன்கேணி பகுதி
மாணவிகளுக்கும், ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள
தமிழ்-முஸ்லிம் குடும்பங்கள் தலைமை தாங்கும் பெண்களுக்குமான உதவிகளே
இவ்வாறு வழங்கப்பட்டன.
இதன்போது
38 மாணவிளுக்கு பாடசாலை உபகரணங்களும்,16 குடும்பங்கள் தலைமை தாங்கும்
பெண்களுக்கு தொழில் முன்னேற்றத்திற்கான நிதி உதவிகளும் வழங்கிவைக்கப்பட்டன.
சர்க்கிள்
இளம் பெண்கள் அமைப்பின் பணிப்பாளர் அஜானி தலைமையில் நடைபெற்ற இந்த
நிகழ்வில் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தின் உதவி திட்டமிடல் பணிப்பாளர்
அ.சுதாகரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்த
நிகழ்வில் சிறுவர் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலக
உத்தியோகத்தர்கள்,பாடசாலை அதிபர் என பலர் கலந்துகொண்டனர்.
தமிழ்-முஸ்லிம்
மக்களிடையே இன ஒற்றுமையினை ஏற்படுத்தும் வகையிலும் அமைதியான முறையில்
ஒற்றுமையுடன் வாழும் சமூகத்தினை கட்டியெழுப்பும் வகையிலும் இந்த உதவிகள்
வழங்கப்பட்டன.






Post A Comment:
0 comments so far,add yours