வரலாற்று
பிரசித்தி பெற்ற தேசத்து ஆலயமாக விளங்கும் நிந்தவூர் மாட்டுப்பளை
மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவ
திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
உற்சவகால
பிரதம குரு வித்யா பிரவீணா சிவஸ்ரீ அ.மு.நிஷாந்தன் குருக்கள் தலைமையில் ,
ஆலய குரு சிவஸ்ரீ கிருஷ்ண பிரியதர்ஷன் குருக்கள் சமுகத்தில் வருஷாபிஷேக
கிரியைகள் நடைபெற்று வருகின்றன.
தொடர்ச்சியாக
ஒன்பது தினங்கள் பகல் அலங்கார உற்சவ திருவிழாக்கள் இடம் பெற்று
எதிர்வரும் 01ஆம் தேதி வெள்ளிக்கிழமை சித்ரா பௌர்ணமி அன்று தீர்த்த
உற்சவத்துடன் நிறைவடைய இருக்கின்றது .






Post A Comment:
0 comments so far,add yours