நூருல் ஹுதா உமர், ஏ.எல்.எம்.ஷினாஸ்
அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியநீலாவனை வீ.சி வீதியில் வசித்து வந்த 17 வயதுடைய அப்துல் ரஹ்மான் ஸகீன் அஹமட் என்பவர் இன்று (01) காலை 9.30 மணியளவில் தனது வீட்டில் தூக்கில் தொங்கி உயிரிழந்த சம்பவம் பிரதேசத்தில் பெரும் சோகத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த திடீர் மரண விசாரணை அதிகாரி பி.பஹட் சமான் மரண விசாரணைகளை மேற்கொண்டதுடன் பொலிஸாரின் உதவியுடன் உயிரிழந்தவரின் ஜனாஸா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
மேலும் தெரியவருவதாவது, உயிரிழந்த இளைஞன், கையடக்க தொலைபேசியில் அதிக நாட்டத்தோடு சில கேம்ஸ்கள் விளையாடி வருபவர் என்பதுடன் தனது நண்பி ஒருவருடன் பேசும் போது ஏற்பட்ட கருத்து முரண்பாடு, வாக்குவாதத்தை அடுத்து இந்த விபரீதமான முடிவை எடுத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த இந்த விபரீதமான தற்கொலை சம்பவம் தொடர்பில் பெரியநீலாவணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post A Comment:
0 comments so far,add yours