மட்டக்களப்பு, பெரிய போரதீவு அருள்மிகு காரையடி கட்டு நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டு, இன்று (16.04.2026) ஆம் திகதி காலை பாற்குட பவனி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.இவ் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நேற்று (15.04.2026) புதன்கிழமை பக்திப்பூர்வமாக ஆரம்பமானது.
அதன் இரண்டாம் நாள் நிகழ்வான இன்று, (16.04.2026)பெரிய போரதீவு ஸ்ரீ முத்து விநாயகர் ஆலயத்தில் இருந்து பக்தர்கள் பாற்குடங்களை ஏந்தி ஊர்வலமாக காரையடி கட்டு நாகதம்பிரான் ஆலயத்திற்கு வருகை தந்தனர்.
மேள தாளங்கள் முழங்க, வீதியெங்கும் பக்தர்கள் அரோகரா கோஷமிட்டு வர, மிகச் சிறப்பான முறையில் இந்தப் பாற்குட பவனி இடம்பெற்றது.
இவ் ஆலயத்தின் வருடாந்த உற்சவமானது நாளை (17.04.2026) ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள மங்களகரமான பொங்கல் விழாவுடன் இனிதே நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





Post A Comment:
0 comments so far,add yours