சேனைக்குடியிருப்பு வின்னர் விளையாட்டுக்கழகத்தின் சித்திரை குதுகலமும் புதிதாக நிர்மானிக்கப்பட்ட அரங்கு திறப்பு விழாவும்
சா.நடனசபேசன்
கல்முனை வடக்குப் பிரதேசசெயலகப்பிரிவுக்குட்பட்ட சேனைக்குடியிருப்பு வின்னர் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் சித்திரை குதுகல நிகழ்வும் சேனைக்குடியிருப்பு பொது விளையாட்டு மைதானத்தில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட அரங்கு திறப்பு விழாவும் கழகத்தலைவர் சமூகசேவகர் க. செல்வராஜா தலைமையில் சனிக்கிழமை இடம்பெற்றது.
இதன்போது கல்முனைப்பிராந்தியத்தில் புகழ்பூத்த விளையாட்டுக்கழகமான சேனைக்குடியிருப்பு வின்னர்விளையாட்டுக்கழகத்தின் பராமரிப்பில் இருந்துவரும் சேனைக்குடியிருப்பு பொது மைதானத்தில் வனிதா,ஜெயரதி பார்வையாளர் அரங்கும் தமிழ்வாணன் அரங்கும் புதிதாக நிர்மானிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டிருந்தது.
இந்நிகழ்வுக்கு அதிதிகளாக நாவிதன்வெளிப் பிரதேசசபையின் தவிசாளர் இ.ரூபசாந்தன் ,கல்முனை வடக்குப்பிரதேசசெயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் ஆன்மீக அதிதிகளாக சேனைக்குடியிருப்பு திருநீலகண்டன் ஆலயத்தின் பிரதம குரு யோ.கஜேந்திரா ,கிட்டங்கிப்பிள்ளையார் ஆலய குரு சி.முரளிதரன் உட்பட பலர் கலந்து சிறப்பித்திருந்தனர் இதன்போது அப்பிரதேசத்தில் பல்கலைக்கழகத்திற்குத்தெரிவான மாணவர்கள், சாதாரணதரப்பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெற்றவர்கள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்றவர்கள் அனைவரும் பாராட்டிக்கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.























Post A Comment:
0 comments so far,add yours