பருத்தித்துறையைச்
சேர்ந்த மீனவரை கடத்திச் சென்று கையையும் காலையும் கட்டி அவரை கொடூரமாக
தாக்கிய இந்திய நாகபட்டின காடை மீனவர்களின் ஒரு வெறித்தனமான சர்வதேச மனித
உரிமை மீறல் செயலை நாங்கள் வன்மையாக கண்டிக்;கின்றோம் அதேவேளை வடக்கு
கிழக்கில் இருக்கும் அத்தனை தமிழ் தலைமைகளும் 'நக் உண்டார் நா விழந்தார்'
என்ற பழமொழிக்கு அமைய தமிழ் மக்கள் துன்புறத்தப்படும் போது கண்டனக்
குரல்கள் எழுப்பாது மௌனமாக மௌனமாக இருப்பது ஏன்? என ஈழ மக்கள் ஜனநாயக்
கட்சி மட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் வர்த்தகருமான அந்தனிசில் ராஜ்குமார்
கேள்வி எழுப்பியுள்ளார்.
மட்டக்களப்பு பாலைமீன்மடுவில்
உள்ள அவரது காரியாலயத்தில் இன்று புதன்கிழமை (29) இடம்பெற்ற ஊடக மாநாட்டில்
இவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொப்புல் கொடி உறவு என கூறிக்
கொண்டு இரு நாடுகளாக இருந்தாலும் பேசுகின்ற மொழி ஒன்றாக இருந்தும் அந்த
மீனவரின் கையையும் காலையும் கட்டிக் கொண்டு தமிழ் நாட்டுக்கு அழைத்துச்
சென்று அந்த துறைமுகத்தில் வைத்து அவரை கொடூரமாக துன்புறுத்தி சித்திரவதை
செய்து மீண்டும் நாகபட்டின மீனவர்களால் தாக்கப்பட்டுள்ளார் இது ஒரு சர்வதேச
மனித குற்றம்.
அதேவேளை தமிழ் நாட்டில் இருக்கின்ற அத்தனை
அரசியல் வாதிகளிடம் கோரிக்கை விடுக்கின்றோம் தொப்புக் கொடி உறவு என
சொல்லிக் கொண்டு அரசியல் செய்கின்ற நீங்கள் இலங்கை மீனவர்களை இவ்வாறு
கடத்திச் சென்று துன்புறுத்தி தாக்கப்பட்டபோது நீங்கள் மௌனமாக இருப்பதை
கண்டு நாங்கள் மிகவும் மனவேதனை அடைகின்றோம்.
எனவே பாதிக்கப்பட்ட
மீனவரின் நலநனை கருத்தில் கொண்டு அவரை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதோடு
அவருக்கான இழப்பீடை வழங்க அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுக்க
வேண்டும் என்பதுடன் சட்டத்தை கையில் எடுத்து இந்த இலங்கை மீனவரை தாக்கிய
நாகபட்டின மீனவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு வழக்கு தொடரப்பட
வேண்டும் என தமிழ் நாட்டில் உள்ள அத்தனை அரசியல் தலைவர்களிடம் கேட்டுக்
கொள்கின்றோம்.
இந்த இரண்டு நாட்டு மீனவர்களுக்கு இடையே
ஏற்படுகின்ற முரண்பாடுகளை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்தோடு
எங்கள் கட்சியின் செயலாளர் நாயகம் டக்கிளஸ் தேவானந்தா கடற்தொழில்
அமைச்சராக இருந்தபோது பழைய புகையிரத வண்டிகளின் பெட்டிகள், பழைய
பஸ்வண்டிகளை அந்த கடலுக்குள் கொண்டு சென்று இறக்கும் முயற்சியில் ஈடுபட்டு
ஓரளவு செய்து கொண்டிருந்தபோது அதனை முழுமையாக செய்வதற்கு தமிழ் தலைமைகள்
ஒத்துழைத்து இருந்தால் இந்த பிரச்சனை இன்று ஏற்பட்டிருக்காது.
எனவே
இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் இப்போது இருக்கு
அமைச்சர் சந்திரசேகரன் முன்னாள் அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தாவின் இந்த
கருதிட்டத்தை செயற்படுத்தினால் இந்திய மீனவர்கள் ஒருபோதும் எங்கள்
எல்லைக்குள் வரமாட்டார்கள் அத்துடன் அந்த இழுவை மடி படகு தொழிலை அவர்களால்
ஒரு போதும் செய்ய முடியாது.
இதனால்; இரு நாட்டு
மீனவர்களுக்குள் ஒரு முரண்பாடும் வரமாட்டாது எனவே இந்த பழைய புகையிரத வண்டி
பெட்டிகள் பஸ்வண்டிகளை கடலுக்குள் கொண்டு சென்று இறக்கினால் இந்த
இருநாட்டு மீனவர்களின் முரண்பாடு முடிவுக்கு வந்துவிடும்
அதேவேளை
வடக்கு கிழக்கில் இருக்கும் தமிழ் தலைமைகள் அத்தனையும் 'நக் உண்டார் நா
விழந்தார்' என்ற பழமொழிக்கு அமைய இன்று யாழ்பாணத்து மீனவர் கடத்தப்பட்டு
தாக்கப்பட் சம்பவம் தொடர்பாக எந்தவிதமான கண்டனத்தையும் தெரிவிக்காமல்
மௌனமாக இருக்கின்றனர்
எனவே பழமொழிக்கு அமைய தமிழ் தலைமைகள் மத்திய
அரசாங்கம் மாநில அரசாங்கங்களிடம் பல உதவிகளை பெற்றிருக்கின்றதுடன் இந்திய
அரசாங்கத்திடம் இருந்து சுகபோகங்களை அனுபவிக்க வேண்டும் உதவிகளை பெற
வேண்டும் என்ற நோக்கத்துக்காக இதற்கு கண்டனங்களை தெரிவிக்காமல்;
இருக்கின்றார்களா?
இவர்கள் தமிழ் மக்களின் ஏகோபித்த பிரதி
நிதிகள் என கூறிக் கொண்டு மக்களின் வரிப்பணத்தில் சொகுசு வாழ்கை வாழுகின்ற
வடக்கு கிழக்கு தமிழ்களை பிரதிநிதிப்படுத்துகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தமிழ் மக்கள் பாதிக்கப்படும் போதும் துன்புறுத்தல்படும்போதும்
தமிழர்களுக்காக குரல் கொடுக்காமல் தேசியத்தை பேசிக் கொண்டு மௌனமாக இருப்பது
ஏன்?
அண்மையில் செட்டிபாளையத்தில் கடற்படை அதிகாரியினால்
நந்தீசன் என்ற மீனவர் முழங்காலில் இருத்தி சித்திரவதைபடுத்தப்பட்டார்
அதற்கு கூட வடக்கு கிழக்கைச் சேர்ந்த எந்த அரசியல் தலைமைகளும் எதிராக குரல்
கொடுக்கவே நடவடிக்கை எடுக்கவில்லை.
இருந்துபோதும் நாங்கள்
உடனடியாக பத்திரிகையாளர் மாநாட்டை கூட்டி கண்டனம் தெரிவித்து ஜனாதிபதியின்
கவனத்திற்கு கொண்டு சென்று அதற்கான நீதியை பெற்றுக் கொடுத்துள்ளோம் .
எனவே
வடக்கு கிழக்கில் தமிழ் தலைமைகளுக்கு தமிழ் மக்கள் அதிகாரத்தை வழங்கியும்
நீங்கள் மக்களின் நலன்களில் அக்கறை கொள்ளாமல் மக்களின் வரிபணத்தில் செகுசு
வாழ்க்கை வாழ நினைக்கின்றீர்களே தவிர தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதி
என்றால் தமிழ் மக்கள் துன்புறத்தப்படும்போது கண்டனக்குரல்கள் எழுப்பாது
மௌனமாக இருக்கின்றீர்கள் எனவே மௌனத்தை கலைத்து தமிழ் மக்களுக்கு குரல்
கொடுங்கள்
அதேவேளை ஜனாதிபதி மற்றும் வெளிநாட்டு அமைச்சர் மீன்பி
அமைச்சர் உள்ளிட்டோர் சிறை பிடிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட மீனவர்
தமிழ் என்று பாராமல் இலங்கை மீனவர் என்ற அடிப்படையில் அவரை உடனடியாக
அங்கிருந்து மீட்டு இலங்கைக்கு கொண்டு வரவேண்டும் என கேரிக்கை
விடுக்கின்றோம் என்றார்.
Post A Comment:
0 comments so far,add yours