க.விஜயரெத்தினம்)
மட்டக்களப்பு வலயக்கல்வி
அலுவலகத்திற்குட்பட்ட மூன்று கோட்டத்திற்கான தமிழ்மொழிதினம் கோட்டக்கல்வி
பணிப்பாளர்கள் தலைமையில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை (20)காலை முதல்
நடைபெற்றது.
மட்டக்களப்பு
வலயக்கல்வி பணிப்பாளர் தினகரன் ரவியின் வழிகாட்டல் ஆலோசனையின்பேரில்
கோட்டக்கல்வி பணிப்பாளர்களின் கூட்டிணைந்த பங்களிப்புடன்
தமிழ்,பண்பாட்டு,கலை,கலாச்சாரங் களுடன் தமிழ்மொழிதினம் நடைபெற்றது.மண்முனைப்பற்று,மண் முனை
வடக்கு,ஏறாவூர் கோட்டங்களுக்கான தமிழ்மொழிதினம் 65 பாடசாலைகளைச் சேர்ந்த
மாணவர்களின் பங்குபற்றுதலுடன் 53 வகையான போட்டிகள் நடைபெற்றது.
மண்முனைப்பற்று
கோட்டத்திற்கான நிகழ்வுகள் கோட்டக்கல்வி பணிப்பாளர் எஸ்.தில்லைநாதன்
தலைமையில் ஆரையம்பதி மகாவித்தியாலத்திலும்,மண்முனை வடக்கு கோட்டத்திற்கான
நிகழ்வுகள் கோட்டக்கல்வி பணிப்பாளர் த.கோகுலகுமாரன் தலைமையில் மட்/ மகாஜன
கல்லூரியிலும்,ஏறாவூர் கோட்டத்திற்கான கோட்டக்கல்வி பணிப்பாளர்
ரீ.ராஜ்மோகன் தலைமையில் நடைபெற்றது.
இவற்றில் எழுத்தாக்கப்போட்டிகள்,வில்லுப் பாட்டு, நடனம்,இசை,நாட்டியநாடகம்,பாவோ தல்,பேச்சுப்போட்டிகள்
என்பன நடைபெற்றது.இந்நிகழ்வுகளில் மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின்
பிரதிக்கல்வி பணிப்பாளர் திருமதி.என்.மகேந்திரகுமார்,தமி ழ்பாடத்திற்கான
உதவிக்கல்வி பணிப்பாளர் திருமதி.சகுந்தலா சுதாகரன்,தமிழ்பாட ஆசிரிய
ஆலோசகரர்களான பொ.மேகவண்ணன்,ஜெ.நடேசனாந்தராஜா உட்பட அதிபர்கள்,ஆசிரியர்கள்
மாணவர்கள் கலந்துகொண்டதுன் கோட்டமட்டப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள்
வலயமட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.




Post A Comment:
0 comments so far,add yours