சா.நடனசபேசன்

இலக்கிய விமர்சகரும் சிரேஷ்ட ஊடகவியலாளரும் வருகைதரு விரிவுரையாளருமான ஜெஸ்மி எம்.மூஸா எழுதிய 'அஷ்ரஃப் எனும் இலக்கியம்' ஆய்வு நூல் வெளியீட்டு விழா மருதமுனை கலாசார மண்டபத்தில்  திங்கட் கிழமை(13) மாலை நடைபெற்றது

வாழ்நாள் ஊடக சாதனையாளர் கலாபூஷணம் மர்ஹும் ஏ.எல்.எம்.சலீம் அரங்கில் இடம்பெற்ற இந்நிகழ்வு தென்கிழக்குப்பல்கலைக்கழக மொழித்துறையின் தவிசு பேராசிரியர் றமீஸ் அப்துல்லா தலைமையில் இடம்பெற்றது

தென்கிழக்குப்பல்கலைக்கழக கலை கலாசார பீடாதிபதி எம்.எம்.பாஸில் பிரதம அதிதியாகவும்  வெளியீட்டுப் பிரதியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மருதமுனை அமைப்பாளர் எம்.எச்.எம்.தாஜுதீன்(சறோ) பெற்றுக்கொண்டார்.

கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹுதுல் நஜீம் முன்னிலை அதிதியாகக் கலந்து  சிறப்பித்ததுடன. நினைவுப் பிரதியினை சவூதி அரேபியா நீதி அமைச்சின் மென்பொறியியலாளர் சலீம் அக்கீல் பெற்றுக் கொண்டார் .விழாவின் தொடக்கவுரையினை கல்முனை வலயக்  கல்வி அலுவலக தமிழ் மொழிக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.றியால் நிகழ்த்தியதுடன்  தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.அப்துல் றஸாக் நுால் ஆய்வுரையினை நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது;














Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours