எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில்பெறுகை நடைமுறைகளில் விலை உயர்வினால் ஏற்படும் தாக்கம் தொடர்பான செயலமர்வானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் வழிகாட்டுதலில் ஒய்வு நிலை பிரதி பிரதம செயலாளர் - பொறியியல் எஸ்.சண்முகநந்தன் அவர்களினால் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் கடமையாற்றும் உயர் அதிகாரிகளுக்கான செயலமர்வு புதிய மாவட்ட செயலக கணினி கூடத்தில் இன்று  (22)  ஆரம்பமாகியது.






இரு நாட்களைக் கொண்ட  செயலமர்வில் மாவட்ட செயலக பிரதம பொறியியலாளர், பிரதம கணக்காளர், கணக்காளர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், தொழில்நுட்ப உதவியாளர் ஆகியோர் இச் செயலமர்வில் கலந்து கொண்டனர்.

தற்போதைய பொருட்களின் விலை ஏற்றத்தினால் ஒப்பந்த அடிப்படை வேலைத்திட்டங்கள் மற்றும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது பல சவால்களை எற்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours