இணைந்த கரங்கள் அமைப்பினரிடம் கடந்த சில வாரங்களுக்கு முன் இப்பாடலை அதிபர் விடுத்த கோரிக்கைக்கமைய இம்மாணவர்களின் எதிர்கால கல்வி வளர்ச்சியினை நோக்கமாகக் கொண்டு செயற்பட்டுவரும் இணைந்த கரங்கள் அமைப்பானது இதனை நிவர்த்தி செய்தது.
அதனடிப்படையில் இன்றைய தினம் மேலதிக கற்றல் வகுப்புகளை ஆரம்பித்து வைக்கின்ற அங்குராப்பணம் 2 ஆம் திகதி பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.
இந்நிகழ்வுக்கு சப்பிரகமுவ மாகாணப் பிரதிக் கல்விப் பணிப்பாளர்.வடிவேல் சண்முகநாதன், வலயக் கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி.சகுந்தலா ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.மேலும் இணைந்த கரங்கள் உறுப்பினர்களான திரு.காந்தன், அதிபர் திரு.க.தியாகராஜா க.இந்திராதேவி
மற்றும் எமாலினி பிலிப், க.பங்கயற் செல்வி, மேலும் இப்பாடங்களை கற்பிக்கும் வளவாளர்கள், பெற்றோர்கள், பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்ததுடன் மேலதிக, கணிதம்,ஆங்கிலம்,விஞ்ஞானம் ஆகிய மூன்று பாடங்களுக்கும் ஒரு ஆசிரியருக்கு,ரூபா 12000/= வீதம் மாதாந்தம்,ரூபா .36000.00 நிதியினை இணைந்த கரங்கள் உறவுகளோடு இணைந்து பயணிக்கும். ஜனபாலச்சந்திரன் கோபாலப்பிள்ளை,டேனில் செந்து சுகுணராஜன் ஆகிய இருவரும் வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.


.jpeg)
.jpeg)

.jpeg)


Post A Comment:
0 comments so far,add yours