( வி.ரி.சகாதேவராஜா)
2000
ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படும் கதிர்காம பாதயாத்திரையை வர்த்தமானிப்
பிரகடனம் செய்து ஒரு புனித யாத்திரையாகப் பிரகடனம் செய்யக் கோரும்
கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும்
சனிக்கிழமை 11.04.2025 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு காரைதீவில் நடைபெறவுள்ளது.
அம்பாறை
மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவ.ஜெகராஜன் தலைமையில் இக் கூட்டம்
காரைதீவு சுவாமி விபுலாநந்தா ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இக்கதிர்காம
பாதயாத்திரையை பிரகடனப்படுத்த மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தில் உள்ள
ஆலயம் மற்றும் இந்து மன்றங்கள் அமைப்புக்கள் சார்பாக கலந்து கொண்டு
கருத்துக்களை முன்வைக்கும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஏலவே சபரிமலை ஐயப்பன் கோவில் யாத்திரை வர்த்தமானி பிரகடனம் செய்யப்பட்டு அரச அங்கீகாரம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனவே கதிர்காம பாதயாத்திரை நிகழ்வானது வருடாந்தம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும்
ஒரு சிறப்பு பொருத்திய தேசிய நிகழ்வாக காணப்படுகிறது.



Post A Comment:
0 comments so far,add yours