(-க.விஜயரெத்தினம்)

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும்,மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சரும்,தமிழ்மக்கள்விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் சிறைச்சாலையில்  தொடர்ச்சியாக 5நாட்கள்  உணவு தவிர்த்து உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றநிலையில் உண்ணாவிரதப்போராட்டத்திற்கு  வலுச்சேர்க்கும் முகமாகவும்,அவருக்கு நீதி கிடைக்க வேண்டியும், இன்று வெள்ளிக்கிழமை(17.04.2026)காலை 9.00 மணியளவில்  மட்டக்களப்பு காந்தி பூங்காவில் கறுப்புத்துணியால் வாயைக்கட்டி அமைதியானமுறையில்  கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள்,கட்சியின் மத்தியகுழு உறுப்பினர்கள்,மகளிர்கள்,பொதுமக்கள் கலந்துகொண்டு சுலோகஅட்டையை தாங்கியவாறு தமது கோரிக்கை முன்வைத்தார்கள்.சிறைச்சாலை ஆணையாளரே "கைதிகளும் மனிதர்கள்தான்" உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்ட பிள்ளையானுக்கு தீர்வு வழங்குங்கள்,"சந்திரகாந்தனுக்கு தடுப்புக்காவல் கைதிகளுக்கான சலுகைகளை வழங்கவும்","சிறைக்கைதிகளுக்கு ஜனநாயக கடமைகளை நிறைவேற்ற வசதி வாய்ப்புக்களை வழங்கு" என கவனயீர்ப்பு போராட்டத்தில் குதித்தார்கள்.


சிறைச்சாலை அத்தியட்சகர்,சிறைச்சாலை ஆணையாளர் நாயகம்,ஜனாதிபதி மற்றும் சட்டமாதிபர் போன்றோர்கள் கவனமெடுத்து பிள்ளையானுக்கு சாதாரண கைதிக்கு வழங்கப்படும் சலுகையைப்போன்று பிள்ளையானுக்கும் வழங்கி தங்களது விசாரணையை முன்னெடுக்குமாறு கன்டனப்போராட்டதை முன்னெடுத்தார்கள்.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours