(கனகராஜா சரவணன்) 

 


ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள நீதிமன்ற வீதியில் உள்ள வீடு ஒன்றின் குளியலறையில் உள்ள தண்ணீர் தொட்டியில் தவறிவிழந்து 11வயது சிறுமி ஒருவர் உயிரிழந்த நிலையில்  வியாழக்கிழமை (28) மாலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்


ஏறாவூர் 5 பிரிவு நீதிமன்ற வீதியைச் சேர்ந்த சத்யானந்தன் சதிஷா,என்ற சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.


குறித்த சிறுமியின் தாயார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று வெளிநாடு சென்றிருந்த நிலையில் தந்தையாருடன் இருந்து வந்துள்ள நிலையில்  சம்பவ தினமான நேற்று மாலை 5.30 மணியளவில் சிறுமி அவரது சகோதரன் மட்டுமே தனியாக இருந்து வந்துள்ள நிலையில் தந்தையார் வெளியில் இருந்து வீட்டிற்கு வந்த போது குளியலறையில் சுமார் இரண்டரை அடி உயரமுள்ள ஒரு பேசினில் சிறுமி கிடப்பதை கண்டு அவரை மீட்டு ஏறாவூர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டபோது சிறுமி ஏற்கனவே உயிரிழந்ததாக வைத்தியர்கள் கண்டறிந்தனர்.


இதையடுத்து சடலம் பிரேத பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது 
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours